வதந்தி ரயிலேறியும் வரும், மெயிலேறியும் வரும்ங்கிறதுக்கு உதாரணம், நயன்தாரா-பிரபுதேவா கல்யாண மேட்டர்தான்! ஐதராபாத் சேனல்களில் இரண்டு பேருக்கும் ரகசிய திருமணம்னு செய்தியை கிளப்பிவிட்டுட்டாங்க. அடுத்தடுத்த வினாடிகளில் சென்னையிலும் பற்றிக் கொண்டது விவகாரம். (டெக்னாலஜியை எவ்ளோ வேகமா பயன்படுத்துறாங்கப்பா!)
பிரபுதேவா, நயன்தாரா செல்போன் இரண்டும் 'நாட் ரீச்சபிள்' ஆகிவிட, நாக்கு தள்ளி போனார்கள் நிருபர்கள். யாரை பிடிச்சு, எப்படி உறுதிப்படுத்துவது? நயன்-பிரபுவுடைய பிஆர்ஓ க்கள், மேனேஜர்கள் என்று செல்போன் பறக்க, 'நாங்களே லைன் கிடைக்காம தடுமாறிட்டு இருக்கோம். கேட்டு சொல்றோம்' என்று கழன்று கொண்டார்கள் அவர்களும்.

எப்படி வந்தது இப்படி ஒரு வதந்தி? நயன்தாரா தனது மணிக்கட்டில் பிரபுதேவா படத்தை பச்சை குத்தியிருக்கிறார் என்று ஒரு பிரபல வார இதழில் செய்தி. இன்னொரு பிரபல வார இதழில், நயன்தாரா பற்றி கேட்ட நிருபரிடம் பிரபுதேவா சொன்ன பதில்... 'அது என் சொந்த விஷயம்!' போதாதா? இரண்டையும் முடிச்சு போட்டு, நயன்தாரா கழுத்தில் மூன்றாவது முடிச்சையும் போட்டுவிட்டது மீடியா!
நிருபர்களும், பொதுமக்களும் தவிச்ச தவிப்பை விடுங்க. தமிழ்சினிமாவின் மிக முக்கியமான இரண்டு ஹீரோக்கள், 'செய்தி நிஜம்தானா?'ன்னு கேட்டு நயன்தாராவுக்கு நெருக்கமான வட்டாரத்திலே விசாரிச்சாங்களாம். அவங்களும் சீரியஸ்சா நயன்தாராவை தொடர்பு கொண்டு இன்னாரு விசாரிச்சாங்கன்னு சொல்ல, அதுக்கு நயன்தாரா சொன்ன பதில் இருக்கே, பயங்கரம்டா சாமி...
'மொதல்ல அவங்கவங்க பொண்டாட்டிய பத்திரமா பார்த்துக்க சொல்லுங்க. அப்புறம் வரலாம் எங்கிட்டே'ன்னாராம். உச்சபட்ச கோவத்திலே இருக்காரு போலிருக்கு...!
No comments:
Post a Comment