வாசனைக்கு கூட ஒரு நடிகை இல்லை. ஆனாலும் ஆறுமுகம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா களை கட்டியது. படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் அக்கறையான அழைப்பு மேடையிலும், கீழேயும் கூட்டத்தை சேர்த்திருந்தது. இவர்களுடன் சின்னத்தளபதியின் ரசிகர்களும் திரளாக வந்திருந்ததால் விசில், கூச்சல் என்று ஏக அமர்க்களம்!
'எனக்கெல்லாம் இது தாங்குமா? என்று கேட்ட பரத்தை சமாதானப்படுத்தி தைரியத்தை வரவழைத்ததும் சுரேஷ் கிருஷ்ணாதானாம். பழனி படம்தான் என்னை மாஸ் ஹீரோவாக்கியது. அதற்கு பிறகு ஆறுமுகம் எனக்கு வேறொரு முக்கிய இடத்தை தமிழ் சினிமாவில் கொடுக்கும்' என்று நம்பிக்கையோடு பேசினார் பரத்.
'தேவா சார் இரண்டு வருஷம் படம் இல்லாம இருந்ததா இங்கே சொன்னார். சார், நீங்க அப்படி சொல்லக் கூடாது. தமிழ்சினிமாவின் வரலாற்றில் நீங்க ஒரு பெரிய எபிசோட்! இரண்டு வருஷம் உங்களை பயன்படுத்தலேன்னா அது இந்த சினிமாவுக்குதான் நஷ்டம்' என்று ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டார் பிரசன்னா!
சூப்பர் ஸ்டார் நடித்த 'மூன்று முகம்' சூப்பர் ஹிட்! இதுவோ 'ஆறு முகம்'. படம் டபுள் சூப்பர் ஹிட் ஆகணும் என்று டைமிங்காக அடித்தார் எஸ்.பி.முத்துராமன். நாம எப்படி இந்த டைட்டிலை மிஸ் பண்ணினோம்? என்று படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு மெசேஜ் அனுப்பியிருந்தாராம் சூப்பர் ஸ்டார் ரஜினி. 'அந்தளவுக்கு இந்த டைட்டில் எல்லாரையும் ரீச் பண்ணியிருக்கு' என்றார் பரத். நன்றிக்குரியவர்கள் லிஸ்டில் சுரேஷ்கிருஷ்ணாவுக்கு அடுத்து பரத் சொன்னது ரம்யா கிருஷ்ணனுக்குதான். 'படையப்பா மாதிரியே இதிலே ஒரு பவர்ஃபுல் ரோல் பண்ணியிருக்காங்க' என்றவர், 'நான் இந்த படத்திலே நடிக்க முதலில் தயங்கினேன் தெரியுமா?' என்றார்.
'எனக்கெல்லாம் இது தாங்குமா? என்று கேட்ட பரத்தை சமாதானப்படுத்தி தைரியத்தை வரவழைத்ததும் சுரேஷ் கிருஷ்ணாதானாம். பழனி படம்தான் என்னை மாஸ் ஹீரோவாக்கியது. அதற்கு பிறகு ஆறுமுகம் எனக்கு வேறொரு முக்கிய இடத்தை தமிழ் சினிமாவில் கொடுக்கும்' என்று நம்பிக்கையோடு பேசினார் பரத்.
'தேவா சார் இரண்டு வருஷம் படம் இல்லாம இருந்ததா இங்கே சொன்னார். சார், நீங்க அப்படி சொல்லக் கூடாது. தமிழ்சினிமாவின் வரலாற்றில் நீங்க ஒரு பெரிய எபிசோட்! இரண்டு வருஷம் உங்களை பயன்படுத்தலேன்னா அது இந்த சினிமாவுக்குதான் நஷ்டம்' என்று ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டார் பிரசன்னா!
No comments:
Post a Comment