Saturday, July 4, 2009

முழிச்சுகிட்ட மனைவி... மாட்ட பார்த்த பிரபுதேவா!


லவ் பண்ணி கல்யாணம் செய்து கொண்ட நிறைய சினிமா ஜோடிகளுக்கு இப்போதைய உடனடி தேவை, நாடோடிகள் க்ளைமாக்ஸ்தான் போலிருக்கிறது. ஒரே ஃபிளைட்டில் ஹனிமூனுக்கு போகிற அநேக சினிமா ஜோடிகள், திரும்பி வரும்போது வெவ்வேறு ஃபிளைட்டில் வருவது நம்ம கோடம்பாக்கத்தில்தான்.

பிரகாஷ்ராஜ்-லலிதகுமாரி, ரமலத்-பிரபுதேவா காதல் திருமணம்தான் இப்போது டாப் 10 பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கிறது. நயன்தாராவுடன் லவ். கல்யாணமே முடிந்துவிட்டது என்றெல்லாம் கிசுகிசுக்கப்பட்டாலும், பிரபுதேவாவை விடாமல் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறாராம் ரமலத். இதற்கு பிரபுதேவாவின் அப்பா டான்ஸ் மாஸ்டர் சுந்தரமும் சப்போர்ட் என்கிறது இன்னொரு தகவல்.


கடந்த வாரம் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் பிரபுதேவா. நிர்வாகத்திடம் சொல்லி, “அப்படியே நயன்தாராவையும் கூப்பிடுங்களேன்” என்றாராம். சேனல் தரப்பிலிருந்து அழைப்பு போனது. வரவும் தயாரானார் நயன்தாரா. எப்படியோ விஷயம் ரமலத்துக்கு தெரியவர, பிரபுதேவா கிளம்பும்போது “நானும் வரேன்” என்று கிளம்பினாராம் ரமலத். அவ்வளவுதான். பயங்கர அதிர்ச்சி பிரபுதேவாவுக்கு.


நிகழ்ச்சிக்கு வர வேண்டாம் என்று நயன்தாராவுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி எஸ்கேப் ஆனாராம் பிரச்சனையிலிருந்து! உஸ்...அப்பாடி!

ரமலத்துடன் நயன்தாரா பேச்சு!


நயன்தாராவை பற்றி கிசுகிசுவோ செய்திகளோ இல்லாமல் சூரியன் விடிவதே இல்லை. அந்தளவுக்கு மீடியா லேடி ஆகிவிட்டார் நயன். பிட்டுக்கு மண் சுமந்த சிவன் மாதிரி பிட்டுக்கு நயன் சுமக்கிறார்கள் அநேக சுதந்திர நிருபர்கள். (ஃப்ரீ லேன்சர்ஸ்) பிரச்சனையே இவங்களாலதான் என்று நறநறக்கிறாராம் நயன். எதையாவது எழுதி பரபரப்பை கிளப்பிவிட்டுடுறாங்க. நேரடியா நம்மை சந்திக்கிற நிருபர்களுக்கும் இந்த கிசுகிசுக்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது நயனின் சமீபத்திய வருத்தம். இதையும் ஒரு பிட்டா எழுதுவீங்களாங்ணா...?

நயன்தாரா பற்றி இன்னொரு செய்தி. திடீரென்று ஒரு நாள் திருமதி பிரபுதேவாவுக்கு போன் வந்ததாம். போனை எடுத்த ரமலத்துக்கு பெருத்த கோபம், சந்தோஷம், துக்கம் எல்லாமே! "உங்க கணவரை நான் உங்ககிட்டேயிருந்து பிரிச்சிடுவேன்னு நினைக்காதீங்க. அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லவே இல்லை. நீங்க தைரியமா இருக்கலாம். இதுபற்றி இனிமே குழப்பிக்க வேண்டாம்" என்று கூறினாராம்.


கேட்கவே சந்தோஷமா இருக்கே? (அவுங்களுக்கு) இன்னொரு மேட்டர். துபாயில் இருக்கும் தனது அண்ணனை அறிமுகப்படுத்த பிரபுதேவாவோடு போயிருந்தார் அல்லவா? அதே நாளில் துபாயில்தான் இருந்தார் சிம்பு. இவர் அங்கு வந்திருப்பதை கடைசி நேரத்தில் தெரிந்து கொண்ட நயன், சிக்கல் சிங்கிளா வந்திரப்போவுதோன்னு நினைத்தாராம். ஆனால் அஞ்சினாரில்லை.


எரிநட்சத்திரம் மேலே விழுந்தாலும் எடுத்து போட்டுட்டு போறதுதானே காதல்?

Sunday, June 21, 2009

அவசர மீனாட்சி... அட்வான்ஸ் இருக்கா?


கற்றார்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு இருக்கலாம். நடிகைகளுக்கு? பொறுப்பு இல்லை, அதனால் சிறப்பும் இல்லை! வடபழனியில் உள்ள ஒரு மூன்று நட்சத்திர ஓட்டலில்தான் தங்கியிருப்பார் மீனாட்சி. அடிக்கடி அவரை தேடி அஜ்மல் வருவதால், இனிமே இங்கே இடம் இல்லை என்று கூறிவிட்டார்களாம். வேறு வழியில்லாமல் அதே பகுதியில் இருக்கும் ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு போனார் மீனாட்சி. அங்கேயும் அஜ்மலின் விசிட். வந்தோமா, பார்த்தோமா என்றில்லாமல், ஃபுளோருக்கே கேட்கிற மாதிரி இருவரும் சிரிப்பதும், ஏடா கூட போஸ்களில் வெளியே வருவதுமாக ஒரே ஏ சமாச்சாரங்களாம். அங்கேயும் இடத்தை காலி பண்ண சொல்லிவிட்டார்கள்.

இப்போது தி.நகர் பகுதியில் இருக்கும் ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு வந்துவிட்டார் மீனாட்சி. நல்லவேளையாக இங்கே பிரச்சனை ஏதும் இல்லை என்கிறார்கள். கையில் எந்த படமும் இல்லாமல் சென்னையில் தங்கியிருக்கும் மீனாட்சி, தீவிர பட வேட்டையில் ஈடுபட்டிருக்கிறாராம்.
பொதுவாக படப்பிடிப்பு என்றால் சொந்த செலவு அவசியப்படாது.


எல்லாவற்றையும் தயாரிப்பு நிறுவனம் பார்த்துக் கொள்ளும். இப்போது மீனாட்சியின் பயணம், சொந்த பயணமாக அமைந்திருப்பதால், கையிருப்பு கரைந்து கொண்டே இருக்கிறதாம். அதற்குள் அட்வான்ஸ் வாங்கிவிட வேண்டும் என்று தவிக்கிறார். ஐடியா இருப்பவர்கள் எந்நேரமும் கதவை தட்டி கதை சொல்லலாம். போறீங்களா பாஸ்...

கமல் இயக்கப் போகும் குறும்படம்!


தியரியாக படிப்பதை விட, பிராக்டிகலாக எடுப்பதுதான் புத்திசாலித்தனம் என்பது, அறிவுசால் கமலுக்கு தெரியாதா என்ன? ஸ்கிரீன் ரைட்டிங் பயிற்சி கொடுத்ததோடு நில்லாமல், அங்கு பயின்ற மாணவர்களுக்கு குறும்படம் இயக்குகிற வாய்ப்பையும் கொடுக்கப் போகிறாராம். இந்த குறும்படத்திற்கான செலவை கமலின் ராஜ்கமல் நிறுவனமே ஏற்றுக் கொள்ளப் போகிறது.

பிரஞ்ச் நாட்டை திரைக்கதை ஆசிரியர் ஜீன் கிளாட் கேரீர் முன்னிலையில் இந்த சந்தோஷ தகவலை தெரிவித்தார் கமல். சென்னையை பற்றியதாக இருக்குமாம் இந்த குறும்படங்கள். சுமார் 250 பேர் இந்த பயிற்சியில் கலந்து கொண்டாலும், 60 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் முப்பது பேருக்குதான் இயக்குகிற வாய்ப்பு தரப்படுமாம்.


அமீர், லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், போன்ற பிரபல இயக்குனர்களும் இந்த ஸ்கிரீன் ரைட்டிங் பயிற்சிக்கு வந்திருந்தார்கள். பெரிய இயக்குனர்கள். சிறிய இயக்குனர்கள் உட்பட முப்பது பேர் இந்த படங்களை இயக்குவார்கள். நானும் கூட ஒரு படத்தை இயக்கவுள்ளேன் என்றார் கமல். அப்படியென்றால் நாம் மேலே சொன்ன முன்னணி இயக்குனர்களும் இதில் அடங்குவார்கள் என்று நம்பலாம்.

Sunday, June 14, 2009

சம்பள இழுபறி...? சினேகா ஃபெயில்!


சினேகாவுக்கும் பாவனாவுக்கும் செம போட்டி. இறுதி வெற்றி யாருக்கு? கடந்த வார ரேஸ் கேள்வி இது. இதோ ரிசல்டே வந்திருச்சு. 'அசல்' படத்தில் தல அஜீத்தோட நடிக்கிற வாய்ப்பு பாவனாவுக்குதானாம். கடந்த சில மாதங்களாகவே இழுபறியாக இருந்த ஒரே விஷயம் படத்திலே வர்ற இரண்டாவது ஹீரோயினுக்கு யாரை செலக்ட் பண்ணலாம்? என்பதுதான். மம்தாவில் ஆரம்பிச்சு, மார்க்கெட்லயே இல்லாத ஹீரோயின் வரைக்கும் தேடி உதட்டை பிதுக்கிய டைரக்டர் சரண், இறுதியாக யோசிச்ச நடிகைகள்தான் சினேகாவும், பாவனாவும்.

ஒரே நேரத்தில் இரண்டு பேரிடமும் பேச்சு வார்த்தைகளை துவங்கினார்கள். இருவரில் யாரு கிடைச்சாலும் ஓ.கே என்ற அஜீத்தின் அனுமதியோடு நடந்த பேச்சு வார்த்தையில் எல்லா விஷயத்துக்கும் விட்டுக் கொடுத்தாராம் பாவனா. ஆனால் சம்பள விஷயத்தில் கொஞ்சம் கறாராகவே இருந்தாராம் சினேகா.


பாவனாவுக்கு அட்வான்ஸ் கொடுத்து இழுபறிக்கு முடிவு கட்டியதால், இம்மாதம் படப்பிடிப்பை துவங்கப் போகிறார்கள். முதல் கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெறுகிறதாம். ஏன் மலேசியா? ஒருவேளை பில்லா சென்ட்டிமென்டோ என்னவோ!

அஜீத், விஜய் பட இயக்குனர்கள்...? குழப்பத்தில் கோடம்பாக்கம்!


விட்டா உச்சி மாநாட்டை கூட்டி, நச்சுன்னு நச்சுன்னு விவாதிப்பாங்க போலிருக்கு. அப்பவும் ஒரு முடிவுக்கு வருவாங்களாங்கறதுதான் டவுட்! வர்ற செய்திகளையும் நம்பறதா வேணாமான்னு ஒரே குழப்பம். அஜீத்தோட ஐம்பதாவது படத்தை சீமான் இயக்குறாரு தெரியுமான்னு பீதியை கிளப்புறாங்க. இந்த பக்கம் திரும்பினா, விஜயோட ஐம்பதாவது படத்தை பேரரசு இயக்கலே தெரியுமான்னு நிம்மதிக்கு உத்தரவாதம் தர்றாங்க. என்னதான் நடக்குது கோடம்பாக்கத்திலே?

முதல்ல தல மேட்டருக்கு வருவோம். நீண்ட காலமாகவே தயாரிப்பாளர் தாணு, அஜீத்திடம் கால்ஷீட் கேட்பதாக தகவல். இந்த நேரத்திலே சீமானும் தாணுவிடம் ஒரு கதை சொன்னாராம். கதை பிடித்திருந்ததால் 'விக்ரம், அல்லது அஜீத்துடன் பேசுறேன்' என்றாராம் தாணு. அதற்குள் அஜீத்தின் ஐம்பதாவது படத்தை சீமான் இயக்குகிறார் என்று செய்திகள் கசிய துவங்கிவிட்டது. ஒரு சிங்கிள் பைசா கூட இன்னும் யாருக்கும் கைமாற வில்லை என்கிறது கோடம்பாக்கத்து பட்சி.

இந்த பக்கம் விஜயின் 50 வது படத்தை இயக்குவது யாருன்னு பந்தயம் போட்டு, தெருவுக்கு தெரு சூதாட்ட கிளப்பே நடத்துவாங்க போலிருக்கு. சங்கிலி முருகன் தயாரிக்கிறார்னு ஒரு நியூஸ். படிச்சிட்டு பக்கத்தை திருப்பறதுக்குள்ளே, இல்லையில்லை... இந்த படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்னு இன்னொரு நியூஸ். பேரரசு, பேரு தெரியாத அரசுன்னு ஒரு டஜன் டைரக்டரோட பேரை எழுதிட்டாங்க. இப்போ கடைசியா ஒரு தகவல் உலவுது.

விஜயோட ஐம்பதாவது படத்தை பூபதி பாண்டியன் இயக்குகிறாராம். கதை, வசனம் மட்டும் எஸ்.பி.ராஜ்குமார் என்கிறது கோடம்பாக்கம். இதுவாவது உண்மையாகி இந்த மேட்டருக்கு ஒரு முற்றுப்புள்ளி வைங்கப்பா.

நானா அப்படி நடிச்சேன்? சந்தியா பாய்ச்சல்...


ஒட்டுமொத்த இமேஜும், கெட்டு நாசமாப் போனா மாதிரி குதிக்கிறார் சந்தியா. என்னவாம்? மஞ்சள் வெயில் படத்தின் இயக்குனர் வசீகரன், "இந்த படத்தில் சந்தியா முத்தக்காட்சியில் நடிச்சிருக்காரு" என்று பேட்டியளித்தார். "நான் அப்படி நடிக்கவே இல்லை. விளம்பரத்துக்காக இப்படி சொல்வதை என்னால ஏத்துக்க முடியாது" இதுதான் சந்தியாவின் தாட் பூட்! இதுவரைக்கும் ஓ.கே. அதுக்கு பிறகு அவரு சொல்றதுதான் இன்னும் காமெடி.

யாரோ ஒரு டைரக்டர் இவரிடம் கதை சொன்னாராம். "கதை ரொம்ப பிடிச்சிருந்தது. நடிக்கலாம்னு சம்மதம் சொல்ல நினைச்சப்போதான் இந்த படத்திலே முத்தக்காட்சி இருக்கு. நீங்க ஹீரோவுக்கு முத்தம் கொடுக்கணும் என்றார். அப்படின்னா உங்க படமே வேணாம்னு சொல்லிட்டேன். அப்படிப்பட்ட என்னை போயி இப்படி சொல்லிட்டாரே"ன்னு ஒரே காச் மூச்!


உடம்பெல்லாம் தெரியுற மாதிரி தை தைன்னு குதிக்கிற ஹீரோயின்கள், முத்த காட்சிக்கு மட்டும் 'நோ' சொல்றது என்ன பாலிசின்னு புரியவே இல்லை. சரி, அப்படியே ஒரு பாலிசி இருந்தாலும், கைவசம் ஏதோ பத்து படங்கள் இருப்பது மாதிரியும், வந்த படத்தை ஒரே ஒரு காரணத்துக்காக வேணாம்னு ஒதுகிட்ட மாதிரி சந்தியா பில்டப் பண்ணுவதுதான் ஏன்னே புரியலே. யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க சார்...