Sunday, May 31, 2009

நடிகர் ஷாம் உடன் ஒரு Coffee...!


ஒரு காfப்பி ஷாப்பில் ஷாம்மை சந்தித்த போது...

கேள்வி - ஷாம் இடையில் கொஞ்ச நாளா உங்களை காணவில்லையே.?
ஷாம் - அதை விடுங்க! இந்த வருஷம் பாருங்க என்னோட 4 படங்கள் வர இருக்கிறது, இனி என்னை தொடர்ந்து பார்க்கலாம்.
கேள்வி - நீங்கள் நன்றி சொல்ல நினைப்பது.?
ஷாம் - என்னை திரையுலகில் அறிமுகம் செய்த ஜீவா சாருக்கும், தயாரிப்பாளர் விக்ரம் சிங்க்க்கும் தான்.
கேள்வி - ஷாம் சினிமாவில் வராவிட்டால்?
ஷாம் - கிரிகட் விளையாடிக்கொண்டிருப்பான் (சிரிப்புடன்)
கேள்வி - கடவுள் நம்பிக்கை ?
ஷாம் - நிறையவே உண்டு.

கேள்வி - வர இருக்கும் "அந்தோணி யார்" படம் பற்றி...?
ஷாம் - விரைவில் வெளிவர இருக்கு, விவேக் இன் காமெடி ரொம்ப நல்ல வந்து இருக்கு, மல்லிக கபூரும் என்கூட அருமைய நடிச்சி இருக்காங்க..
கேள்வி - நடிகர்களில் உங்களுக்கு நெருக்கமானவர்கள்...?
ஷாம் - ஆர்யா, பரத், இன்னும் நிறைய பேர் இருக்காங்க...
கேள்வி -நிம்மதி???
ஷாம் - இருக்கிறதை வைத்து சந்தோஷப்படுவது!
என சிரித்துவிட்டு கிளம்பினார் ஷாம்...
நன்றி - சுமன்

குழப்பத்தின் மத்தியில் ஒரு குருந்திரைப்படம் உருவாகும் கதை...



புதுமுக இயக்குனர் "இளம் புயல்" சின்னா யாதவ் இயக்கும் "மலர்" குறுந்திரைப்படத்தில் புதுமுக நாயகன் S.G.ஷங்கர் மற்றும் பல புது முகங்கள் இனைந்து நடித்துள்ளனர். இந்தியாவின் வசந்த் டிவி தயாரிப்பில் உருவாகிவரும் இக்குறுகிய திரைப்படம் கூடிய விரைவில் டிவி செனலில் ஒளிபரப்பாக இருக்கிறது. இக்கதைக்கு கதாநாயகி தேர்வில் தேர்வு செய்யபட்ட புதுமுகங்கள் அமலா மற்றும் கார்திகா படப்பிடிப்பின் இடையே ஒதுங்கிக்கொள்ள அவசர அவசரமாக கதாநாயகி தேர்வு நடத்தி ஒரு மாதிரியாக படத்தை நிறைவு செய்தார் இயக்குனர் யாதவ். இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கும் "மலர்" குறுந்திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இத்தனை குழப்பத்தின் மத்தியில் இயக்குனருக்கு உதவியாக இருந்த கதாநாயகனை இயக்குனர் வெகுவாக பாராட்டி இருக்கிறார். இயக்குனர் சின்னா யாதவிற்கு சமீபத்தில் "இளம் புயல்" எனும் பட்டம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இருபது வருஷத்துக்கு முன்னாடியே வந்திருப்பேன்!--கமல்ஹாசன் பேச்சு


கமல்ஹாசனின் ராஜ்கமல் பட நிறுவனமும், இந்திய தொழில் தொழில் நுட்ப கழகமும் (ஐஐடி) இணைந்து திரைக்கதை எழுதுவது எப்படி என்ற பயிலரங்கத்தை (வொர்க் ஷாப்) ஐஐடி வளாகத்தில் நடத்துகிறது. இதன் தொடக்க விழாவில் பாலுமகேந்திரா, அமீர் உள்ளிட்ட தமிழ் திரையுலகை சேர்ந்த ஏராளமான இயக்குனர்களுடன், கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

'இப்படி ஒரு பயிலரங்கத்தை நடத்தணும்னு நானும் பாலுமகேந்திராவும் கனவு கண்டோம். அப்போ நிறைவேற்ற முடியாதளவுக்கு தடையெல்லாம் வந்திச்சு. அது யாரால வந்திச்சுங்கிறது அவருக்கு தெரியும். ஆனா இப்போ அதை நிறைவேற்றி விட்டோம். அந்த வகையில் எனக்கு சந்தோஷம். இன்டர்நெட் இல்லாத காலத்தில் எனக்கு புனா பிலிம் இன்ஸ்டிடியூட்டாக இருந்தவர் பாலுமகேந்திராதான். அவருகிட்டே மட்டுமில்லே, இன்னைக்கு வர்ற இயக்குனர்கள் கிட்டேயும் நான் நிறைய கத்துக்கிறேன். நான் இன்னும் மாணவன்தான்'.


'நான் மாணவன்தான்னு சொல்றதுக்கு ஒரு திமிரு வேணும். அந்த திமிரு எங்கிட்ட நிறைய இருக்கு' என்றார் கமல். 'நீங்க எழுதிய திரைக்கதையிலேயே உங்களுக்கு பிடிச்சது எது?' இந்த கேள்விக்கு சற்று யோசித்த கமல், 'நான் நேற்று எழுதியதை இன்னைக்கு பார்த்த இன்னும் நல்லா செஞ்சிருக்கலாமோன்னு தோணும். இன்னைக்கு உள்ளதை நாளைக்கு பார்த்தாலும் இப்படிதான் தோணும். இப்படி ஒரு பயிலரங்கத்திலே கலந்துக்கிற வாய்ப்பு எனக்கெல்லாம் ஆரம்பத்திலே கிடைச்சிருந்தால், இப்போ நான் வந்திருக்கிற இடத்துக்கு இன்னும் இருபது வருஷத்துக்கு முன்னாடியே வந்திருப்பேன் என்றார் கமல்.


விழாவில் மலையாள இயக்குனர் ஹரிஹரன், இந்தி திரைப்பட வசன கர்த்தா அதுல் திவாரி, ஐஐடி முதல்வர் இடிசாண்டி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

நான் மட்டுமா காரணம்? ஆர்யா ஆத்திரம்!


அறிந்தும் அறியாமலும், பட்டியல் படங்களுக்கு பிறகு ஆர்யா நடித்த ஒரு படமும் ஓடவில்லை. ஆனால், இரண்டு கோடி சம்பளத்தை குறைப்பதில்லை என்பதில் தீர்மானமாக இருக்கிறாராம். சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவரும், திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவரும் இந்த விஷயத்தை குறிப்பிட, 'இதே வேலையா போச்சு இவங்களுக்கு' என்று கண் சிவக்கிறாராம் ஆர்யா.


உயிரை கொடுத்து நடிக்கிறேன். உச்சி வெயில்னு பார்க்காம ஓடுறேன். என்னை போயி இவ்வளவு சம்பளம் வாங்குறீயேன்னு சாபம் கொடுக்கலாமா? நான் நடிச்ச படம் ஓடலேன்னா அதுக்கு நான் மட்டுமா காரணம்? என்று நெருக்கமானவர்களிடம் சொல்லி இவர் பிதற்றுவது ஐயோ பாவமாக இருக்கிறதாம்.


இதற்கிடையில் மீண்டும் கூட்டு சேர ஆசைப்பட்ட பிதா இயக்குனருக்கு ஆர்யா சொன்ன பதில், 'ஆளை விடுங்க சாமீய்' கதை கேட்கிற விஷயத்தில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார். அதற்காக ஒரு அறிவாளி கூட்டத்தை தயார் செய்யும் வேலையில் இருக்கிறாராம். இப்போதான் அலாரம் வச்சு எழுப்புது விதி!

லவ்வும் இல்லே, ஒன்னும் இல்லே, ஆளை வுடுங்கப்பா!


ஐம்பது வயசு ஆளைக் கூட, 'அமலா போனா என்ன, ஒரு விமலா இருக்காங்களே?' என்று சந்தோஷப்பட வைத்த விமலா ராமன், கண்ணிலே கருவளையம் விழுற அளவுக்கு கவலையிலே ஆழ்ந்திருந்தார். எல்லாமே போன மாசம் வரைக்கும்தான். இந்த மாசம் விமலா, இன்னோரு ஆப்பிள் அமலா!


கருவளையத்துக்கு காரணம் என்ன? அது காணாமல் போன மாயம்தான் என்ன? தமிழில் ஒரு படமும் தேறாமல் போனதால் தெலுங்குக்கு போனார் மம்தா. அங்கேதான் இவருக்கும் வருணுக்கும் பிரண்ஷிப்! போதாதா?


பொறியை அள்ளி போகியிலே போட்ட மாதிரி, இரண்டு பேரையும் சேர்த்து வச்சு ரவுண்டு கட்டியது மீடியா. 'அவருக்கும் எனக்கும் காதலும் இல்லே, கண்றாவியும் இல்லே'ன்னு தனித்தனியா பேட்டி கொடுத்தாலும் விடாம துரத்திய மீடியா, லவ் லவ் என்று மறுபடியும் மறுபடியும் மத்தாப்பூ கொளுத்த, பயங்கர கோவாச்சு வந்திருச்சு விமலாவுக்கு!


வருணையும் வரவழைத்து பக்கத்தில் வச்சுகிட்டு தெளிவா புரிய வச்சாராம் தெலுங்கு மீடியாவுக்கு. 'எனக்கும் இவருக்கும் லவ்வு இல்லே, ஏன் பிரன்ட்ஷிப் கூட இல்லே. ஒரு படத்திலே நடிச்சோம். இனிமே அதுக்கு கூட வாய்ப்பு இல்லே. போயிட்டு வர்றீங்களா' என்றாராம் பொங்க பொங்க! இப்போதைக்கு பேனாவை மூடி வச்சிட்டு, வேறொரு கிசுகிசுவுக்காக வெயிட் பண்றாங்க.


மாட்லாடுற ஏரியாவிலே மறுபடியும் மாட்டுமா மல்லிப்பூ?

புரட்சித்தளபதிக்கு சம்பளம் நவ கோடிகளாம்!


படம் டப்பா என்றாலும் முதல் பத்து நாட்கள் கலெக்ஷனுக்கு உத்திரவாதம் கொடுக்கிற ஹீரோக்கள் மூவரில் விஷாலும் ஒருவர்! மற்ற இருவர் யார் யார் என்பதை உங்களின் பேரரறிவிற்கே விட்டு விடுகிறோம். இந்த ஒரு காரணத்திற்காகவே 'வச்சுக்கோ...' என்று விஷாலுக்கு வாரியிறைக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள்.


போக்கிரி பட தயாரிப்பாளர் ரமேஷ் தெலுங்கில் பெரிய்ய்ய்ய்ய்ய முதலீடு செய்திருக்கிறாராம். மூன்று முன்னணி ஹீரோக்களை வைத்து தலா இருபத்தைந்து கோடி பட்ஜெட்டில் மூன்று படங்களை எடுத்து வருகிறாராம். இவர்தான் விஷாலை வைத்து தமிழில் புதிய படத்தை தயாரிக்கிறார். புரட்சித்தளபதிக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? நவ கோடிகளாம்!


தோரணை படத்தின் ரிசல்ட் என்னவென்றே தெரியாத நிலையில் இப்படி ஒரு சம்பளத்தை கொடுக்க எப்படி முன்வந்தார் ரமேஷ்? வேறொன்றுமில்லை, நாம் முதல் பாராவில் சொன்ன ஃபார்முலாதான்! வியாபார நுணுக்கங்களை விடுங்கள்... பெரும் பிரயத்தனம் எடுத்து ரீமாசென்னுக்கும் அட்வான்ஸ் கொடுத்துவிட்டார்களாம். விஷால் ரசிகர்களுக்கு இதுதான் லேட்டஸ்ட் இனிப்பு. இன்னொரு ஹீரோயினாக முன்பே கமிட் செய்யப்பட்டவர் ஸ்ரேயா என்பது ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்தான். ஒரே படத்தில் முன்னாள் அண்ணியும்... இந்நாள் அண்ணியும்!

பிரஸ் வரைக்கும் வந்த பிஸ்கோத்து மேட்டர்!


யானைக்கு கட்டு கட்டா கரும்பை போடுறவங்க, எலிக்கு ஒரு மசால் வடைய போடுறதுக்கு என்னென்னாவோ சொல்றாங்களேன்னாரு லைட்மேன் ஒருத்தரு. என்னா மேட்டருன்னு வாய கிளறுனா, ரொம்ப சொச்சம்..., மூவாயிரத்த தாண்டாத பிஸ்கோத்து மேட்டரு!


விஷால் நடிச்ச முந்தைய படத்தோட ஸ்டில்களை பிரஸ்சுக்கு கொடுக்கறதுக்காக நிறைய சிடிக்களை வாங்கி தயார் பண்ணினாராம் சிவாங்கிற பிஆர்ஓ. இந்த வகையிலே சுமார் மூவாயிரத்து சொச்சம் பில்லு. இதை கொடுக்க அப்புறம் இப்புறம்னு இழுக்கடிச்சாங்களாம். சரி கடைசியா என்னாச்சு? அதை சொல்றதுக்கு முன்னாடி ஒரு ப்ளாஷ்பேக்!


திமிரு படத்திலே ஒரு ஆளை நடிக்க வைக்கிறேன்னு ஐம்பதாயிரம் பணத்தை அவருகிட்டேயிருந்து வாங்கிட்டாரு அந்த படத்தோட டைரக்டர்! ஆனா நாளைக்கு வா, நாளைக்கு வான்னு நாளை ஓட்டியவரு கடைசிவரைக்கும் அந்தாளை நடிக்க வைக்கவே இல்லே. ரிலீஸ் நேரத்திலே ஆபிஸ் வாசலுக்கு வந்து அறைகூவல் விட்டாரு அந்த நடிக்காத நடிகர். வேறு வழியில்லாம ஐம்பதாயிரத்தை விஷாலே கொடுத்தாராம்.


ஹ¨ம், மறுபடியும் நம்ம மேட்டருக்கு வருவோம். அப்படியெல்லாம் கொடுத்த விஷால் தரப்பு, சிவாவை பல முறை இழுக்கடிச்சு இந்த மூவாயிரத்து சொச்சத்தை கொடுக்காமலே விட்ருச்சு. இப்போ போயி கேட்டா, தோரணை ஓடினா தர்றோம்ங்கிறாங்களாம்! ஒன்பது கோடி சம்பளம் வாங்குற நடிகர் ஆபிஸ்லே, மூவாயிரத்துக்கு முக்குறதுதான் ஏன்னு தெரியலேன்னாரு லைட் மேன்!


எறும்புக்கே கரும்புகள போடுற ஏரியாவிலே, இந்த பிஸ்கோத்து மேட்டரை பிரஸ் வரைக்கும் கொண்டு வந்திட்டாங்களே, ரொம்ப பாவம்யா....!

விஜய்யோடு ஜோடி சேரப்போகிறாரா சினேகா?


விஜய்யோட ஐம்பதாவது படத்திலே அவருக்கு ஜோடியா நடிக்கப் போவது தமன்னா! (செய்தி ரொம்ப பழசுங்...ணா) படத்திலே இன்னொரு ஹீரோயினும் இருக்கக்கூடும்ங்கிறாங்க. அது யாருங்கிறதுதான் கேள்வி மேல கேள்வியா இருக்கு கோலிவுட்லே!


சஸ்பென்சை அவங்களா உடைக்குறதுக்குள்ளே இன்னும் என்னென்னா சொல்வாங்களோ? நம்ம காதிலே விழுந்ததையும் சொல்லி தொலைச்சுருவோம். நடந்துச்சுன்னா மார் தட்டிக்கலாமே! நடக்கலேன்னா...? மனுஷனுக்குதான் மறதிங்கிற பெரிய சொத்து இருக்கே, அனுபவிக்கட்டும். விடுங்ணா... (ஹிஹி)


அந்த ரெண்டாவது ஹீரோயினுக்கு இப்போதிலிருந்தே உன்னைப்பிடி, என்னைப்பிடி போராட்டமாம். பின் சந்து வழியா ப்ரியாமணி கூட, 'உள்ளேன் ஐயா' சொல்றதா தகவல். இன்னொரு பக்கத்திலேயிருந்து ஸ்ரேயாவும் பிரஷ்ஷர் கொடுக்கிறாராங்களாம். இவங்கள்ளாம் போட்டி போடுறதை பார்த்தா மாசத்துக்கு முப்பது நாளுதானேங்கிற சந்தேகமே வருது. எப்படிதான் நேரம் கிடைக்குதோ? இவங்க போட்டியெல்லாம் ஒரு பக்கம் இருக்க, 'சினேகாவை பார்க்கலாமே' என்று தளபதிகிட்டேயிருந்தே சிக்னல் கிடைச்சிருக்காம்!


ஆமாவா? ஆமாவா? ஆமாவா?


சினேகா பக்கம் கேள்வியை அனுப்பினால் 'பொறுத்திருந்து பாருங்க' என்று கண் சிமிட்டுகிறார்கள். யாராவது புலனாய்வு புலிங்க இருந்தா அந்த பக்கம் மூக்கை நுழைச்சு பாருங்கப்பா...!

நிறுவன தலைவராக விஜய்! கட்சி வேலைகள் பரபர...


அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார் விஜய் என்று கிளம்பிய கிசுகிசுவை தொடர்ந்து அவரை நேரில் சந்திக்கும் போது, அப்படியா? என்று கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறார்கள் நிருபர்கள். அவர்களுக்கெல்லாம் விஜய் சொல்கிற ஒரே பதில், "என்னுடைய பிறந்த நாளான ஜுன் 22 ந் தேதி வரைக்கும் பொறுத்திருங்க. நல்ல செய்தி சொல்றேன்" என்பதுதான்.


கட்சி துவங்குகிற விஷயத்தை தவிர வேறென்ன நல்ல செய்தியை சொல்லிவிடப் போகிறார்? இன்னொரு அதிகாரபூர்வமான செய்தியும் உலா வருகிறது. கட்சியின் நிறுவன தலைவராக மட்டுமே விஜய் இருப்பாராம். (பா.ம.க வில் ராமதாஸ் எப்படியோ, அப்படி!) நேரடியாக தலையிட மாட்டார். பொதுச்செயலாளர், தலைவர் என்ற முக்கிய பொறுப்புகளை அவரது அப்பா எஸ்.ஏ.சி பார்த்துக் கொள்வாராம்.


இப்போது எம்.ஜி.ஆர் ஃபார்முலாவுக்கு தாவியிருக்கிறார் விஜய். அதை நிரூபிக்கும் விதமாக வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடல். எழுதியிருப்பவர் கபிலன். "உணவு உடை இருப்பிடம் உழவனுக்கு கிடைக்கணும். அவன் அனுபவிச்ச மிச்சம்தான் ஆண்டவனுக்கே படைக்கணும்" இந்த வரிகளை கேட்டவுடன் சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் குதித்த விஜய், கபிலனை நேரில் வரச்சொல்லி பாராட்டினாராம். அப்படியே சால்வை போட்டு ஒரு பொற்கிழியும் கொடுத்திருந்தால், அரசியல் தலைவர் 'களை' வந்திருக்கும். ஹம்....?


கொ.ப.செ பதவியை யாராவது நடிகைக்கு கொடுத்தால் கலகலப்பா இருக்கும்ங்கிறது நம்ம யோசனை!

ரீமிக்ஸ் பண்ணுறேன்னு கொல்றாங்க... வடிவேலு ஆவேசம்!


தமிழ்சினிமாவில் ரீமிக்ஸ் என்ற பெயரில் நடைபெறுகிற 'இசை வதையை' கண்டிக்காத பிரபலங்களே இல்லை எனலாம். "அடுத்தவர் வாந்தியை சுவைப்பது போலதான் இந்த ரீமிக்ஸ்" என்று கடுமையான வார்த்தைகளால் சாடி இருந்தார் இசைஞானி இளையராஜா. "இனிமேல் ரீமிக்ஸ் செய்யப் போவதில்லை" என்று அறிவித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.


இதோ - திரையுலகத்திலிருந்து ரீமிக்ஸ் கலாச்சாரத்தை நோக்கி மேலும் ஒரு கல்! எறிந்திருப்பவர் வைகைப்புயல் வடிவேலு. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைகைப்புயல், சற்று வேகமாக சுற்றி அடித்தது வார்த்தைகளை!


தமிழ்சினிமாவில் தற்போது ஓரிரு படங்களுக்கு இசையமைத்துவிட்டாலே பெரிய இசை மேதை போல சுற்றி வருபவர்களுக்கு முன் எவ்வளவோ சாதனைகளை செய்து விட்டு அடக்கமாக இருக்கிறாரே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்... அவர் ஒரு இமயம். இவர்களை போன்றவர்கள் இரவு பகல் பாராமல் இசையமைத்த பாடல்களை கூசாமல் எடுத்து ரீமிக்ஸ் என்ற பெயரில் கெடுத்து கொல்வது வேதனையாக இருக்கிறது. இந்த கொடுமைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். தயவு செய்து இப்படி அடுத்தவர்களின் உழைப்பை திருடாதீர்கள். முடிந்தால் நீங்களே சுயமாக சிந்தித்து இசையமையுங்கள். அதை சிறிது காலம் கழித்து நீங்களே ரீமிக்ஸ் செய்து கொள்ளுங்கள். யார் கேட்க போகிறார்கள்? என்றார் ஆவேசமாக!


இசையமைச்சவங்க சொல்லியே கேட்கலே, இவரு சொல்லியா கேட்க போறாங்க. விடுங்க சார்...

ஏ.ஆர்.ரஹ்மான் விளையாட்டு? கத்தை கத்தையா கையிலே நோட்டு....!


கொப்புளிச்சா பன்னீரு, துப்புனா பிரசாதம்னு சும்மாவா சொன்னாங்க பெரிய மனுஷங்களை பற்றி? வேடிக்கையாக கேட்ட ஒரு விஷயத்தை சீரியஸ்சா எடுத்துகிட்டு 'புடிங்க'ன்னு மூணு கோடியை கையிலே திணிச்சுட்டு கிளம்புச்சு ஒரு குரூப்! எங்கேய்யா இந்த அதிசயம்?


ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானை நேரில் பார்த்து வாழ்த்துக்களை தெரிவிக்கணும்னு நினைச்சாங்க கனரா வங்கி அதிகாரிங்க. போன் அடிச்சதுமே புறப்பட்டு வாங்கன்னு சொல்லிட்டாராம் இசைப்புயல். போனவர்களிடம் சகஜமா பேசிட்டு இருந்தவர், 'சார், எங்களுக்கெல்லாம் லோன் கொடுக்க மாட்டீங்களா?' என்றாராம். அவ்வளவுதான்!


ஏ.டி.எம் மிஷினை விட வேகமா செயல்பட்ட அதிகாரிங்க, அங்கேயே உட்கார்ந்து அரை மணி நேரத்தில் லோன் சேங்ஷன் பண்ணினாங்களாம். கொஞ்ச நஞ்சமில்லே, மூணு கோடி! 'வேண்டாம் சார். வெளையாட்டுக்கு கேட்டேன்'னு ரஹ்மான் சமாளிச்சாலும், விடாம செக்கை கையிலே திணிச்சுட்டுதான் கிளம்புனாங்களாம்.


நமக்கெல்லாம் இப்படி ஒரு வேகத்தோட செயல்படுமா பேங்க்? பின் மண்டையிலே பெட்ரோலை ஊத்திகிட்டு யோசிக்க வேண்டிய கேள்வி!

மீடியா அது பற்றி கொஞ்சம் யோசிக்கணும்! நயன்தாரா அட்வைஸ்...


'பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கும் காதல், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள்' என்று எல்லா பத்திரிகைகளும் எழுதிவிட்டன. (நம்மை தவிர) இது குறித்து எந்த பதிலுமே சொல்லவில்லை சம்பந்தப்பட்ட இருவரும். முக்கியமாக பிரபுதேவா கூட இது பற்றி கருத்து சொல்ல விரும்பாமல் ஒதுங்கிக் கொண்டார். மீனாவை காதலிக்கிறார் என்று முன்பு ஒரு முறை கிளப்பிவிட்ட பத்திரிகைகள் தானாகவே அடங்கி போகிற வரை அதுபற்றி அவர் பேசியதில்லை. அதே ஸ்டைலைதான் இந்த முறையும் கடைபிடித்தார்.


ஆனால் பிரபுதேவா பேசாவிட்டால் என்ன? நாம் பேசிவிடுவோம் என்று முடிவுக்கு வந்த நயன்தாரா, ரொம்ப தெளிவாக விளக்கியிருக்கிறார். என்னவென்று?


'நானும் அவரும் நல்ல நண்பர்களாகதான் பழகி வருகிறோம். எங்களுக்குள் காதல், கல்யாணம் என்று வித விதமாக எழுதி புழுதியை தூற்றுகிறது மீடியா. என்னை எழுதுவது பற்றி கூட எனக்கு கவலையில்லை. ஆனால் மாஸ்டருக்கு திருமணம் ஆகி மனைவி குழந்தைகள் என்று ஒரு குடும்பம் இருக்கிறது. அதற்காகவாவது இதுபோல எழுதுவதை இனிமேல் குறைத்துக் கொள்ள வேண்டும்' என்று கூறியிருக்கிறார்.


இந்த ஆகாத லவ்வுக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைங்கப்பா...!

தனுஷ் வீட்டிலிருந்து ஸ்ரேயாவுக்கு சாப்பாடு!


ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்தில், மருமகன் தனுஷ் நடிக்கும் 'குட்டி' படப்பிடிப்பு நடந்தது. (வாடகையிலே சலுகை உண்டுங்களா?) ஸ்ரேயா மணக்கோலத்தில் இருக்க, முன் வரிசையில் தனுஷ்! இரண்டு பேரு கண்ணுலேயும் குற்றால சீசன். அப்படியே மாலையை கழட்டி எறிஞ்சுட்டு ஸ்ரேயா ஓடுற மாதிரி சீன்!.


ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜுனியர் ஆர்ட்டிஸ்டுங்க மேடைக்கு முன்னாடியும், நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கேமிராவுக்கு பின்னாடியும் இருக்க, நாலைந்து முறை மாலையை கழற்றி எறிந்துவிட்டு ஓடினார் ஸ்ரே! யாரடி நீ மோகினி படத்தை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவகர் இயக்கும் இப்படத்தில் இது ரொம்ப சென்ட்டிமென்ட் சீன் மட்டுமல்ல, ரொம்ப முக்கியமான சீனும் கூட. டேக் நிறைய போனாலும் பர்பெக்ஷன் முக்கியம். விடக் கூடாது என்ற முடிவோடு திரும்ப திரும்ப எடுத்துக் கொண்டிருந்தார் ஜவகர்.


இந்த ஒரு காட்சிக்கே காலை நேரம் சரியாகிவிட்டது. லஞ்ச் நேரம். அவரவர் தகுதிக்கேற்ப இடங்களை தேர்வு செய்து அமர்ந்து கொள்ள, ஸ்ரேயாவுக்கும் சேர்த்து தனுஷ் வீட்டிலிருந்து சாப்பாடு வந்து சேர்ந்தது. ஆயிரம் ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகளுக்கும் பரிமாற வேண்டுமே? புரடக்ஷன் டீம் பம்பரமாக வேலை பார்த்தது. ஒளிப்பதிவாளர், ஸ்டில்கிராபர் என்று கேமிரா குழு ஒரு பக்கம் உட்கார்ந்தது. ஒருவர் ஓடிவந்து தட்டுகளில் பொறியல் சமாச்சாரங்களை வைத்தார். 'சார், நீங்களா? பரவாயில்லை, வெயிட் பண்றோம். புரடக்ஷன் டீம் வரட்டுமே' என்று நெளிந்தது கேமிரா டீம். 'பரவாயில்லே, சாப்பிடுங்க' என்று விடாமல் பரிமாறியது....?


வேறு யாருமல்ல, படத்தின் தயாரிப்பாளர் ரமணா! படம் எடுக்க வந்தா என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு?

ஜீவாவின் அடுத்தது என்ன?


"கச்சேரி" படத்தில் நடித்து வரும் ஜீவா அடுத்து "சிங்கம் புலி" என்ற படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இந்தப் படத்தை எஸ்.பி.ஜனநாதனிடம் உதவியாளராக இருந்த சாய்ரமணி இயக்குகிறார். இதில் ஒரு வேடத்திற்கு ஜோடியாக நடிப்பவர் திவ்யா.