Monday, June 8, 2009

மீனாட்சி மேலதான் தப்பு! டைரக்டர் கொக்கரிப்பு


யாருக்கோ சடங்குன்னா, யார் யாரோ நலுங்கு சுத்துறது நம்ம சினிமாவிலேதான்! தயாரிப்பாளருக்கு சம்பந்தமே இல்லாத ஒரு விழாவுக்கு ஒரு ஹீரோயின் கிளம்புறாங்கன்னு வைங்க. அவங்க போக வர்ற பிளைட் டிக்கெட்டை கடைசியா எந்த ஷ§ட்டிங்கிலே இருக்காங்களோ, அந்த தயாரிப்பாளருதான் ஏத்துக்கணும்னு ஒரு எழுதப்படாத விதி இருக்கு கோடம்பாக்கத்திலே.

இப்படி அடுத்தவங்க காசிலே மஞ்சக்குளிக்கிறவங்க மத்தியிலே தன் காசிலே போற ஹீரோயின்களும் இருக்கதான் செய்யுறாங்க. லேட்டஸ்டா வந்த மீனாட்சி விவகாரம் எப்படி? அகம் புறம் படத்தோட கடைசி நாள் ஷ§ட்டிங்கை முடிச்சிட்டு மும்பை திரும்புறதுக்கு டிக்கெட் போட சொன்னாங்க. தயாரிப்பாளரும், டைரக்டருமான திருமலையும் டிக்கெட் போட்டு கொடுத்திட்டாரு. ஆதித்யா ஹோட்டலில் இருந்து காரில் கொண்டு போயி விடுற பொறுப்பும் இவருடையது. எல்லாமே சரியதான் நடந்திச்சு. ஆனால், கிளம்ப வேண்டிய மீனாட்சி ஒரு மணி நேரம் ஏர்போர்ட்டுக்கு லேட்டா போனாராம். அதுவரைக்கும் நிறுத்தி வைக்க அது என்ன டவுன் பஸ்சா? ஃபிளைட் புஸ்ஸ்ஸ்....

வண்டி போயிருச்சு. வேற டிக்கெட் எடுத்துக் கொடுங்கன்னு மீனாட்சி கேட்க, முடியாதுன்னு திருமலை மறுக்க, வெளியே வராம உள்ளேயே உட்கார்ந்திட்டாங்க பொண்ணும், அம்மாவும். பிளைட்டை தவற விட்டது அவங்க தப்புன்னு ஆர்ப்பாட்டம் பண்ணாம, மீண்டும் அவங்களை ஹோட்டலுக்கு வரவழைச்சு இரவு தங்க வைச்சு மறுநாள் டிக்கெட் போட்டு அனுப்பினாராம் திருமலை. இந்த வகையில் அவருக்கு சம்பந்தமே இல்லாமல் எக்ஸ்ட்ரா 19 ஆயிரம் செலவு.

ஆனால் பெண் என்றால் பேயே இறங்கும்போது மீடியா இறங்காதா? எல்லாரும் மீனாட்சிக்கு சப்போர்ட் பண்ண, உண்மைய எங்கே போயி சொல்றதுன்னு புலம்புனாரு திருமலை. நம்பகிட்டே சொல்லியாச்சுல்ல, கவலைய விடுங்க...

No comments:

Post a Comment