Sunday, May 31, 2009

தனுஷ் வீட்டிலிருந்து ஸ்ரேயாவுக்கு சாப்பாடு!


ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்தில், மருமகன் தனுஷ் நடிக்கும் 'குட்டி' படப்பிடிப்பு நடந்தது. (வாடகையிலே சலுகை உண்டுங்களா?) ஸ்ரேயா மணக்கோலத்தில் இருக்க, முன் வரிசையில் தனுஷ்! இரண்டு பேரு கண்ணுலேயும் குற்றால சீசன். அப்படியே மாலையை கழட்டி எறிஞ்சுட்டு ஸ்ரேயா ஓடுற மாதிரி சீன்!.


ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜுனியர் ஆர்ட்டிஸ்டுங்க மேடைக்கு முன்னாடியும், நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கேமிராவுக்கு பின்னாடியும் இருக்க, நாலைந்து முறை மாலையை கழற்றி எறிந்துவிட்டு ஓடினார் ஸ்ரே! யாரடி நீ மோகினி படத்தை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவகர் இயக்கும் இப்படத்தில் இது ரொம்ப சென்ட்டிமென்ட் சீன் மட்டுமல்ல, ரொம்ப முக்கியமான சீனும் கூட. டேக் நிறைய போனாலும் பர்பெக்ஷன் முக்கியம். விடக் கூடாது என்ற முடிவோடு திரும்ப திரும்ப எடுத்துக் கொண்டிருந்தார் ஜவகர்.


இந்த ஒரு காட்சிக்கே காலை நேரம் சரியாகிவிட்டது. லஞ்ச் நேரம். அவரவர் தகுதிக்கேற்ப இடங்களை தேர்வு செய்து அமர்ந்து கொள்ள, ஸ்ரேயாவுக்கும் சேர்த்து தனுஷ் வீட்டிலிருந்து சாப்பாடு வந்து சேர்ந்தது. ஆயிரம் ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகளுக்கும் பரிமாற வேண்டுமே? புரடக்ஷன் டீம் பம்பரமாக வேலை பார்த்தது. ஒளிப்பதிவாளர், ஸ்டில்கிராபர் என்று கேமிரா குழு ஒரு பக்கம் உட்கார்ந்தது. ஒருவர் ஓடிவந்து தட்டுகளில் பொறியல் சமாச்சாரங்களை வைத்தார். 'சார், நீங்களா? பரவாயில்லை, வெயிட் பண்றோம். புரடக்ஷன் டீம் வரட்டுமே' என்று நெளிந்தது கேமிரா டீம். 'பரவாயில்லே, சாப்பிடுங்க' என்று விடாமல் பரிமாறியது....?


வேறு யாருமல்ல, படத்தின் தயாரிப்பாளர் ரமணா! படம் எடுக்க வந்தா என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு?

No comments:

Post a Comment