Sunday, May 31, 2009

நிறுவன தலைவராக விஜய்! கட்சி வேலைகள் பரபர...


அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார் விஜய் என்று கிளம்பிய கிசுகிசுவை தொடர்ந்து அவரை நேரில் சந்திக்கும் போது, அப்படியா? என்று கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறார்கள் நிருபர்கள். அவர்களுக்கெல்லாம் விஜய் சொல்கிற ஒரே பதில், "என்னுடைய பிறந்த நாளான ஜுன் 22 ந் தேதி வரைக்கும் பொறுத்திருங்க. நல்ல செய்தி சொல்றேன்" என்பதுதான்.


கட்சி துவங்குகிற விஷயத்தை தவிர வேறென்ன நல்ல செய்தியை சொல்லிவிடப் போகிறார்? இன்னொரு அதிகாரபூர்வமான செய்தியும் உலா வருகிறது. கட்சியின் நிறுவன தலைவராக மட்டுமே விஜய் இருப்பாராம். (பா.ம.க வில் ராமதாஸ் எப்படியோ, அப்படி!) நேரடியாக தலையிட மாட்டார். பொதுச்செயலாளர், தலைவர் என்ற முக்கிய பொறுப்புகளை அவரது அப்பா எஸ்.ஏ.சி பார்த்துக் கொள்வாராம்.


இப்போது எம்.ஜி.ஆர் ஃபார்முலாவுக்கு தாவியிருக்கிறார் விஜய். அதை நிரூபிக்கும் விதமாக வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடல். எழுதியிருப்பவர் கபிலன். "உணவு உடை இருப்பிடம் உழவனுக்கு கிடைக்கணும். அவன் அனுபவிச்ச மிச்சம்தான் ஆண்டவனுக்கே படைக்கணும்" இந்த வரிகளை கேட்டவுடன் சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் குதித்த விஜய், கபிலனை நேரில் வரச்சொல்லி பாராட்டினாராம். அப்படியே சால்வை போட்டு ஒரு பொற்கிழியும் கொடுத்திருந்தால், அரசியல் தலைவர் 'களை' வந்திருக்கும். ஹம்....?


கொ.ப.செ பதவியை யாராவது நடிகைக்கு கொடுத்தால் கலகலப்பா இருக்கும்ங்கிறது நம்ம யோசனை!

No comments:

Post a Comment