Sunday, May 31, 2009

ரீமிக்ஸ் பண்ணுறேன்னு கொல்றாங்க... வடிவேலு ஆவேசம்!


தமிழ்சினிமாவில் ரீமிக்ஸ் என்ற பெயரில் நடைபெறுகிற 'இசை வதையை' கண்டிக்காத பிரபலங்களே இல்லை எனலாம். "அடுத்தவர் வாந்தியை சுவைப்பது போலதான் இந்த ரீமிக்ஸ்" என்று கடுமையான வார்த்தைகளால் சாடி இருந்தார் இசைஞானி இளையராஜா. "இனிமேல் ரீமிக்ஸ் செய்யப் போவதில்லை" என்று அறிவித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.


இதோ - திரையுலகத்திலிருந்து ரீமிக்ஸ் கலாச்சாரத்தை நோக்கி மேலும் ஒரு கல்! எறிந்திருப்பவர் வைகைப்புயல் வடிவேலு. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைகைப்புயல், சற்று வேகமாக சுற்றி அடித்தது வார்த்தைகளை!


தமிழ்சினிமாவில் தற்போது ஓரிரு படங்களுக்கு இசையமைத்துவிட்டாலே பெரிய இசை மேதை போல சுற்றி வருபவர்களுக்கு முன் எவ்வளவோ சாதனைகளை செய்து விட்டு அடக்கமாக இருக்கிறாரே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்... அவர் ஒரு இமயம். இவர்களை போன்றவர்கள் இரவு பகல் பாராமல் இசையமைத்த பாடல்களை கூசாமல் எடுத்து ரீமிக்ஸ் என்ற பெயரில் கெடுத்து கொல்வது வேதனையாக இருக்கிறது. இந்த கொடுமைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். தயவு செய்து இப்படி அடுத்தவர்களின் உழைப்பை திருடாதீர்கள். முடிந்தால் நீங்களே சுயமாக சிந்தித்து இசையமையுங்கள். அதை சிறிது காலம் கழித்து நீங்களே ரீமிக்ஸ் செய்து கொள்ளுங்கள். யார் கேட்க போகிறார்கள்? என்றார் ஆவேசமாக!


இசையமைச்சவங்க சொல்லியே கேட்கலே, இவரு சொல்லியா கேட்க போறாங்க. விடுங்க சார்...

No comments:

Post a Comment