Sunday, May 31, 2009

இருபது வருஷத்துக்கு முன்னாடியே வந்திருப்பேன்!--கமல்ஹாசன் பேச்சு


கமல்ஹாசனின் ராஜ்கமல் பட நிறுவனமும், இந்திய தொழில் தொழில் நுட்ப கழகமும் (ஐஐடி) இணைந்து திரைக்கதை எழுதுவது எப்படி என்ற பயிலரங்கத்தை (வொர்க் ஷாப்) ஐஐடி வளாகத்தில் நடத்துகிறது. இதன் தொடக்க விழாவில் பாலுமகேந்திரா, அமீர் உள்ளிட்ட தமிழ் திரையுலகை சேர்ந்த ஏராளமான இயக்குனர்களுடன், கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

'இப்படி ஒரு பயிலரங்கத்தை நடத்தணும்னு நானும் பாலுமகேந்திராவும் கனவு கண்டோம். அப்போ நிறைவேற்ற முடியாதளவுக்கு தடையெல்லாம் வந்திச்சு. அது யாரால வந்திச்சுங்கிறது அவருக்கு தெரியும். ஆனா இப்போ அதை நிறைவேற்றி விட்டோம். அந்த வகையில் எனக்கு சந்தோஷம். இன்டர்நெட் இல்லாத காலத்தில் எனக்கு புனா பிலிம் இன்ஸ்டிடியூட்டாக இருந்தவர் பாலுமகேந்திராதான். அவருகிட்டே மட்டுமில்லே, இன்னைக்கு வர்ற இயக்குனர்கள் கிட்டேயும் நான் நிறைய கத்துக்கிறேன். நான் இன்னும் மாணவன்தான்'.


'நான் மாணவன்தான்னு சொல்றதுக்கு ஒரு திமிரு வேணும். அந்த திமிரு எங்கிட்ட நிறைய இருக்கு' என்றார் கமல். 'நீங்க எழுதிய திரைக்கதையிலேயே உங்களுக்கு பிடிச்சது எது?' இந்த கேள்விக்கு சற்று யோசித்த கமல், 'நான் நேற்று எழுதியதை இன்னைக்கு பார்த்த இன்னும் நல்லா செஞ்சிருக்கலாமோன்னு தோணும். இன்னைக்கு உள்ளதை நாளைக்கு பார்த்தாலும் இப்படிதான் தோணும். இப்படி ஒரு பயிலரங்கத்திலே கலந்துக்கிற வாய்ப்பு எனக்கெல்லாம் ஆரம்பத்திலே கிடைச்சிருந்தால், இப்போ நான் வந்திருக்கிற இடத்துக்கு இன்னும் இருபது வருஷத்துக்கு முன்னாடியே வந்திருப்பேன் என்றார் கமல்.


விழாவில் மலையாள இயக்குனர் ஹரிஹரன், இந்தி திரைப்பட வசன கர்த்தா அதுல் திவாரி, ஐஐடி முதல்வர் இடிசாண்டி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment